சேலம் அருகே பிளஸ் 2 மாணவி மானபங்கம்: திமுக நிர்வாகிக்கு வலை
சேலம்: சேலம் அருகே பிளஸ் டூ மாணவியை மானபங்கப்படுத்திய திமுக நிர்வாகி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்து உள்ள பழையூர் இருசனாம்பட்டியைச் சேர்ந்தவர் குமார்(39). அவரது மகள் மாலதி(18). ஆட்டையாம்பட்டியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(41) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாலதி மீது மோதுவது போன்று சிலர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். ராஜாவின் தூண்டுதலால் தான் அவர்கள் மாலதியிடம் வம்பு இழுத்ததாக குமார் நினைத்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக குமாருக்கும், ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா தனது உறவினர் தங்கதுரை(34), திமுக நிர்வாகி பெரியண்ணன்(எ) கண்ணுப்பையன்(52) ஆகியோருடன் சேர்ந்து குமாரைத் தாக்கினார். இதைப் பார்த்த மாலதி அதை தடுத்தபோது அவரது உடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர். இதையடுத்து இது குறித்து குமார் ஆட்டையாம்பட்டி போலீஸில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜாவையும், தங்கதுரையையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெரியண்ணனை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications