ஹோட்டல் பெண் மேலாளரை ஈவ் டீசிங் செய்த தூதரக ஊழியர்கள் 4 பேர் கைது!

கன்னாட் பிளேஸ் அருகே என்டிஎம்சி பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் உதவி மேலாளராக பணியாற்றும் பெண் நேற்று மாலை ஜன்பத் மார்க்கெட் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது டெல்லியில் உள்ள வெளி நாட்டு தூதரகத்துக்கு சொந்தமான காரில் வந்த நான்கு வெளிநாட்டினர் ஒட்டல் உதவி மேலாளரை பார்த்து, தகாத முறையில் ஜாடை காட்டியதாக தெரிகிறது. பின்னர் உதவி மேலாளரிடம் அவர்கள் வம்பு செய்தனர்.
இதைக் கண்டித்து, அந்த பெண் அவர்களிடம் வாய்தகராறு செய்து கூச்சல் போட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். காரில் இருந்த 4 பேரையும், கன்னட் பிளேஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்கள் மீது குற்றப்பிரிவு சட்டம் 509, 506 மற்றும் 34-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் ஒருவர், டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தில் பணியாற்றுபவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான நால்வரில் இருவர் லெபனான் நாட்டை சேர்ந்தவர்கள், ஒருவர் அல்ஜீரியாவையும், மற்றொருவர் ஏமன் நாட்டையும் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது இந்திய நாட்டு ஈவ் டீசிங் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications