வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி டெல்டா விவசாயிகள் விடிய விடிய போராட்டம்
தஞ்சாவூர்: காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் விடிய விடிய முற்றுகைப் போராட்டம் நடத்தினர். சாலையில் சமைத்துச் சாப்பிட்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். சம்பா சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர் முற்றுகையிடும் போராட்டம நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து தமிழக விவசாய சங்கத்தினர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்னர் விவசாய சங்கத்தினர் ரோட்டில் அமர்ந்து முற்றுகையிட்டனர். நேற்று இரவு விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. அவர்கள் ரோட்டில் அடுப்பு அமைத்து சமையல் செய்து சாப்பிட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
திருவாரூர் கலெக்டர் அருலுவலகம் முன்பும் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் லாசர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமதலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
மயிலாடுதுறையில், போராட்டக்குழுவினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கச்சேரி சாலையில் கஞ்சி தொட்டி அமைத்து கஞ்சி தயாரித்து சாப்பிட்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications