ரயில் கட்டண உயர்வுக்கு கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு.. ஆனால் ரயில்வே ஊழியர்கள் ஆதரவு!
சென்னை: ரயில் கட்டண உயர்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ள விசித்திர நிலையைக் கண்டுள்ளது நாடு.
வழக்கமாக கம்யூனிஸ்டுகள் எல்லாத் திட்டங்களையும் எதிர்ப்பார்கள் என்று பெயர் உண்டு. கம்யூனிஸ்டுகள் ஒரு போராட்டத்தை அறிவித்தால் அல்லது ஏதாவது ஒன்றை எதிர்த்தால் அதை உடனடியாக தொழிலாளர்கள் அமைப்புகள் வழிமொழிவதுதான் வழக்கம்.
ஆனால் முதல் முறையாக ரயில்வே கட்டண உயர்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதை ஆதரித்துள்ளனர் அவர்கள் சார்ந்த தொழிசங்கங்களைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளர்கள்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வுக்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஒரு சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முன்னதாக இந்த உயர்வு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தல ைவர் குருதாஸ் தாஸ்குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், ரயில் கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும். பொருட்களின் விலை அதிகரித்தால் பணவீக்கமும் அதிகரிக்கும் என்றார்.
தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், வழக்கமாக ரயில் கட்டண உயர்வை ரயில்வே பட்ஜெட் வரும்போது தான் அறிவிப்பார்கள். ஆனால் இப்போது முன்னதாகவே அறிவித்திருப்பது சரியல்ல. இந்த கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதுவும் 20 சதவீத கட்டண உயர்வு என்பது மிகவும் அதிகம்.
மத்திய அரசு ஏற்கனவே மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பதும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைதான் என்றார்.


Click it and Unblock the Notifications
