சூரிய உதயம் பார்க்க கன்னியாகுமரி வரும் ரோசையா
குமரி: தமிழக ஆளுநர் ரோசையா இரண்டு நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார்.
தமிழக ஆளுநர் ரோசையா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார். அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரிக்கு வருகிறார். இன்று மாலை 5 மணிக்கு குமரிக்கு வரும் அவர் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையை வந்தடைகிறார். அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் பகவதியம்மன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இரவு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை(11ம் தேதி) காலை சூரிய உதயம் பார்க்கும் அவர் 9.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.
அங்கு நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள், இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு பட்டங்களை வழங்குகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிச் செல்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications