வளர்ந்த பெண்களை கற்பழிப்பது புரிந்து கொள்ளக்கூடியதாம்: சொல்கிறார் பாஜக மூத்த எம்.பி. ரமேஷ்
ராய்பூர்: வளர்ந்த பெண்களை கற்பழிப்பது புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால் மைனர் பெண்களை கற்பழிப்பது பெருங்குற்றம். அந்த குற்றத்தைச் செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என்று மூத்த பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்தய அமைச்சருமான ரமேஷ் பாய்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சத்தீஸ்கரைச் சேர்ந்த பாய்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வளர்ந்த பெண்கள் கற்பழிக்கப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் மைனர் பெண்களை கற்பழித்து பெருங்குற்றம் ஆகும். அந்த குற்றத்தைச் செய்பவர்களை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டும் என்றார்.
எந்த வயது பெண்ணையும் கற்பழிப்பது குற்றம் தான் என்பதை அவருக்கு யாராவது தெரியப்படுத்த வேண்டும் என்று பலர் தெரிவித்துள்ளனர்.
பாய்ஸின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலதரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கான்கரில் உள்ள ஹாஸ்டலில் இருந்த பெண்களை ஆசிரியரும், வாட்ச்மேனும் சேர்ந்து பல மாதங்களாக கற்பழித்த சம்பவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தான் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இத்தனைக்கும் அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கான்கர் சம்பவம் போன்று நடக்கும் பல சம்பவங்கள் குறித்து யாரும் புகார் தெரிவிப்பது இல்லை. இப்பொழுது கான்கர் விவகாரத்தில் அந்த ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தாலோ, வேலையை விட்டு நீக்கினாலோ அந்த பெண்களின் மானம் திரும்பியா வரப்போகிறது? கான்கர் சம்பவத்தால் மாநிலத்திற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications