எல்லையில் பதற்றம் - இந்தியா- பாக். பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந் கூறுகையில், இந்தியா- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் மோதல் அதிகரித்திருப்ப்பது கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.
இருநாடுகளும் உயர்நிலை பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications