2ம் வகுப்பு ரயில் பயணிகள் அடையாள அட்டை: விதிமுறை தளர்வு!
டெல்லி: இரண்டாம் வகுப்பு முன்பதிவு ரயில் பயணிகளுக்கான கட்டாய அடையாள அட்டை விதிமுறையை ரயில்வே நிர்வாகம் தளர்த்தி உள்ளது. இதன்படி குடும்ப அட்டை மற்றும் வங்கி பாஸ் புத்தகம் நகல் போதுமானது என்று தெரிவித்துள்ளது.
ரயில் பயணத்தில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணிகள் உள்ளிட்ட அனைத்து வகுப்பு முன்பதிவு ரயில் பயணிகளும், கட்டாயம் அசல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு பயணிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் மிக முக்கியமானவை என்பதால், அவற்றை பயணத்தின் போது எடுத்த சென்றால் தொலைந்து விட வாய்ப்பு உள்ளதாகவும்,மீண்டும் அதனை அரசு அலுவலகங்களில் விண்ணப்பித்து பெறுவது கடினமானது என்றும் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டை அல்லது தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பாஸ் புத்தகத்தின் நகலை அடையாள அட்டை சான்றாக எடுத்துச் செல்லலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதர அடையாள அட்டைகளை பொறுத்த வரை அசல் ஆவணங்கள் அவசியம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தளர்த்தப்பட்ட விதிமுறைகள் இரண்டாம் வகுப்பு மற்றும் இருக்கை பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இணையதள முன்பதிவு, தட்கல் முன்பதிவு, உயர் வகுப்பு பயணத்துக்கு பொருந்தாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications