சென்னை வியாசர்பாடியில் ஏ.டி.எம்.-ல் கொள்ளை முயற்சி! போலீஸ் வந்ததால் கொள்ளையர் ஓட்டம்!
சென்னை: வியாசர்பாடி சர்மாநகர் எருக்கஞ்சேரி சாலையில் அக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளையடிக்க கொள்ளையர்கள் முயற்சித்தனர். அப்போது போலீசார் அங்கு ரோந்து சுற்றி வந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பொங்கல்நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில் அக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். மையத்தை 2 கொள்ளையர் உடைக்க முயற்சித்துள்ளனர். உடைக்க முடியாத நிலையில் சற்று ஓய்வுக்காக கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து நின்றிருக்கின்றனர். அப்போது அப்பகுதியில் எம்.கே.பி. நகர் போலீசார் ரோந்து சுற்றி வந்திருக்கின்றனர். போலீசாரைக் கண்டதும் கொள்ளையர் 2 பேரும் தப்பி ஓடிச் சென்றனர். அவர்களை போலீசார் விரட்டிப் பிடிக்க முயற்சித்தும் பலனில்லாமல் போய்விட்டது.
பின்னர் ஏ.எடி.எம். மையத்தை போலீசார் பார்வையிட்ட போது இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் இருந்த ரூ11 லட்சம் ரொக்கம் தப்பியிருக்கிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications