சொந்த பணத்தில் அணை: தென் மாவட்டங்களில் கடவுளாக வணங்கப்படும் பென்னி குவிக்…
பல லட்சம் ரூபாய் சொத்துக்களை விற்று லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்க அணை கட்டியவர் பென்னிகுவிக். வறட்சி தாண்டவமாடிய மாவட்டங்களில் முப்போகம் விளையவைத்து பஞ்சம் தீர்த்த பென்னி குவிக் தென் மாவட்ட மக்களின் கடவுள் என்றால் மிகையாகாது.
ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதராக செய்து காட்டினார். அதனால்தான் தமிழக அரசு இன்றைக்கு மணிமண்டபம் கட்டி தனது நன்றியை திருப்பி செலுத்தியிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முப்போகம் விளையச்செய்தார்.
சோதனைகளை சாதனைகாளாக்கி தன் சொத்தை விற்று பெருமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்தார் பென்னி குவிக். அரும்பாடு பட்டு அவர் கட்டிய இந்த அணை தான் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின், பாசனம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது.
எங்கோ பிறந்து, இங்கு வந்து இத்தகைய சமூக அக்கறையுடன், தொலைநோக்குடன் வியத்தகு சாதனை படைத்தவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

பென்னி குவிக் எனும் மாமனிதர்
பென்னி குவிக் பிறப்பால் இந்தியர்தான். இவர் 1841 ஜனவரி15ல் புனோயில் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் பெற்றார். நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.

அணை கட்ட திட்டம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.
முல்லை மற்றும் பெரியாறை இணைத்து, அணை கட்ட ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

அடித்துச் செல்லப்பட்ட அணை
ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குவிக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.
அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு சிரமத்திற்கிடையே அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.

சொத்தை விற்ற பென்னி குவிக்
அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குவிக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

காவல் தெய்வமாக நிற்கிறார்
தென் மாவட்டங்களில் பென்னி குவிக் என்பது வெறும் பெயரல்ல, தமிழக மக்களின் வணக்கத்துக்குரிய ஒரு காவல் தெய்வத்தின் பெயர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்தவர்களை சாமிக்கு சமமாக வைத்துப் போற்றும் மதுரை மண், அந்த மண்ணுக்காக தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஒரு வெள்ளைக்காரரை குலம் தழைக்க வரம் கொடுத்த சாமியாகவே மதித்து பொங்கல் வைத்து கும்பிடுகின்றனர்.

பிள்ளைகளுக்கு பெயர்
தேனி உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் இன்றும் கூட தங்களது வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முதல் பெயராக பென்னிகுவிக் என்று பெயர் சூட்டுவது பாரம்பரியமாக தொடர்கிறது. பென்னிகுவிக் கோவில்களும் கூட தேனி மாவட்ட கிராமங்களில் ஏராளமாக உள்ளன. தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின்போது பென்னிகுவிக்குக்கு படையலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நினைவுச்சின்னமான கல்லறைகள்
முல்லைப் பெரியாறு அணையை 1895ம் ஆண்டில் அவர் கட்டி முடித்தார் பென்னிகுவிக். அணை கட்டுமானப் பணியின்போது பலர் உயிரிழந்தனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும், காலரா வந்தும் பலர் பலியானார்கள். அவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல பல ஆங்கிலேயர்களும் கூட இருந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட என்ஜீனியர்கள், உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கான கல்லறை கூட இன்றும் அங்குள்ளது.

தியாகத்தின் சின்னம்
இப்படி தமிழர்களின் ரத்தமும், ஆங்கிலேயர்களின் ரத்தமும் கலந்து உருவாகி மாபெரும் தியாகச் சின்னமாக திகழ்கிறது முல்லைப் பெரியாறு அணை. அணை கட்டி முடிக்கப்பட்டவுடன் தனது மனைவியோடு அங்கு சென்று பொங்கிப் பெருகி அணை வழியாக ஓடி வந்த தண்ணீரைப் பார்த்து பென்னிகுவிக் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று செய்திகள் கூறுகின்றன. ஒரே ஒரு அரசு அதிகாரி, அதிகபட்ச நேர்மை, மக்கள் மீது கரிசனம் கொண்டு செயல்பட்டால்கூட எவ்வளவு பெரிய நன்மை விளையும் என்பதற்கு பென்னி குவிக் பெரிய உதாரணம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications