உயிரை கையில் பிடித்திருக்கும் விவசாயிகளுக்கு எப்போது தான் விடிவு காலம் பிறக்குமோ? கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையிலே உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தமிழகத்திலே உள்ள மருத்துவமனைகளிலேயே பெரிய மருத்துவமனை. அந்த மருத்துவமனைக்கு, மருந்துகளுக்கான நிதியினை அதிமுக அரசு கடந்த ஆண்டை விடக் குறைத்து விட்டதாமே?
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2,700 உள்நோயாளிகளும், 12,000 வெளிநோயாளிகளும் சிகிச்சைக்காக அன்றாடம் வருகிறார்கள். தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவமனையாக இது விளங்குகிறது.
கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது. 2011-2012ம் ஆண்டு, திமுகழக ஆட்சியில் மருந்துகளுக்காக இந்த மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 7 கோடி ரூபாய். இந்த நிதியை கடந்த ஆண்டு 6 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டதாக செய்தி வெளியானது.
ஆயத் தீர்வையாக மட்டும் பல கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ள நிலையில், அதிமுக அரசு ஏழை, எளியோரின் நலன் காக்கும் இதுபோன்ற அத்தியாவசிய அடிப்படைச் செலவுகளைக் குறைக்காமல் இருப்பது நல்லது.
டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலையைப் பார்க்கச் சென்றுள்ள அமைச்சர்கள்-அதிகாரிகள் கொண்ட குழுவிடம், வறட்சி பாதித்த விளை நிலங்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி பகுதி நிவாரணமாக இல்லாமல், முழு நிவாரணத் தொகையாக, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று விவசாயிகள் மனுக் கொடுத்திருக்கிறார்களே?
பத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிர்விட்ட பிறகுதான், விவசாயிகளே வெகுண்டெழுந்து வீதிக்கு வந்த பிறகுதான், அரசுக்கே யோசனை வந்து குழுவினை அறிவித்திருக்கிறார்கள்.
குழு எப்போது பயணம் செய்து முடிப்பது, எப்போது அறிக்கை தருவது, எப்போது அரசு நிவாரணம் தருவது என்று வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து தவிக்கும் விவசாயிகள் தங்கள் உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு கண்ணீர்க் கடலிலே மூழ்கியிருக்கிறார்கள்.
ஆண்டு தோறும் குறுவைச் சாகுபடியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, சம்பாப் பயிரும் நன்கு விளைந்து அறுவடை நடத்தி, உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விவசாயிகள், இந்த ஆண்டு வேதனைத் தீயில் மூழ்கி எங்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் ஏது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு - விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - தற்கொலை செய்து கொண்டு இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு, அவர்கள் குடும்பத்திலே ஒருவருக்கு அரசு வேலை - இவற்றை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உயர் மட்டக் குழு தங்கள் ஆய்வை முடித்து விட்டு அளிக்கும் பரிந்துரைகளை யாரிடம் கொடுப்பார்களோ? விவசாயிகளுக்கு எப்போது விடிவு காலம் பிறக்குமோ? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications