கடுங் குளிரில் நடுங்கும் நெல்லை: மக்கள் வீடுகளில் முடக்கம்
நெல்லை: ஊட்டியை போல் நெல்லையில் கடுங் குளிர் வாட்டுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். வரலாறு காணாத குளிரால் அதிகாலையில் வாக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மார்கழி மாத பனி மச்சை பிளக்கும். தை பனி தரையை துளைக்கும் என கிராமப்புறங்களில் கூறுவதுண்டு. பருவ நிலை மாற்றத்தால் கோடை காலங்களில் வெயில் மண்டையை பிளப்பது போல் குளிர் காலத்தில் பனி வாட்டி வதைக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மார்கழி பனி முடிந்து தை பிறந்த பிறகும் ஊட்டியை போன்று கடுங் குளிர் நிலவுகிறது. மாலையில் துவங்கும் பனிப் பொழிவு மறுநாள் காலை
சூரியன் உதித்த பிறகும் நீடிக்கிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்த போதிலும் குளிர்ந்த காற்று வீசுகிறது. பனியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் போர்வை, ஸ்வெட்டர், குல்லாவை தேடுகின்றனர்.
இதனால் சாலையோரக் கடைகளில் போர்வை, ஸ்வெட்டர், குல்லா விற்பனை அதிகரித்து வருகிறது. நெல்லையில் வாக்கிங் செல்பவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கம், வ.உ.சி. மைதானத்திற்கு அதிகாலை 5.30 மணிக்கே வந்து விடுவர். தூத்துக்குடி மக்கள் தருவை மைதானத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். ஆனால் தற்போது கடுங் குளிர் காரணமாக பலரும் தாமதமாகவே வாக்கிங் செல்கின்றனர். அதிகாலையில் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்பவர்கள், செய்தித்தாள் போடுபவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பனிப்பொழிவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நெல்லை அறிவியல் மைய அலுவலர் சீதாராம் கூறுகையில், ஸ்ரீநகர், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் கடுங்குளிர் நிலவுகிறது. அதன் எதிரொலியாக தற்போது நாடு முழுவதும் கடுங்குளிராக உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த பனி நீடிக்கும் என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications