அயர்லாந்தில் பர்கரில் குதிரை இறைச்சி: 10 மில்லியன் பர்கர்கள் வாபஸ்

அயர்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த டெஸ்கோ மாட்டு இறைச்சி பர்கரை பரிசோதித்ததில் அதில் 29 சதவீதம் குதிரை இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெஸ்கோ இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பர்கர்கள் அனைத்தையும் வாபஸ் பெற்றது.
அதிகாரிகள் 27 பர்கர்களை சோதித்ததில் அதில் 10 பர்கர்களில் குதிரை இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்தைச் சேர்ந்த சூப்பர் மார்கெட் செயின்களான ஆல்டி, ஐஸ்லாந்து, லிடில் மற்றும் டெஸ்கோ மாட்டு இறைச்சி தயாரிப்புகளை வாபஸ் பெற்று வருகின்றன.
குதிரை இறைச்சி உள்ள பர்கர்களை திரும்பக் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யார்க்ஷயரில் உள்ள டேல்பக், அயர்லாந்தில் உள்ள சில்வர்கிரெஸ்ட் புட்ஸ் மற்றும் லிபே மீட்ஸ் ஆகிய 3 இறைச்சி வினியோகஸ்தர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். டெஸ்கோ பர்கர்ஸ் சில்வர்கிரெஸ்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சில்வர்கிரெஸ்ட் புட்ஸ் மற்றும் டேல்பக் ஆகியவை ஏபிபி புட் குழுமத்தைச் சேர்ந்தது.
குதிரை இறைச்சி விஷயம் வெளியானதை அடுத்து கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்ட 10 மில்லியன் பர்கர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
இது குறித்து ஒருவர் ட்விட்டரில் விளையாட்டாக கூறியிருப்பதாவது, ஷெர்கருக்கு என்ன ஆனது என்று தற்போது தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தின் பிரபலமான ரேஸ் குதிரையான ஷெர்கர் கடந்த 1983ம் ஆண்டு திருடுபோனது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications