பாகிஸ்தானில் ’காத்ரி’ உருவாக்கிய புரட்சி நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு!

Subscribe to Oneindia Tamil

Qadri
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் சீருத்தத்தை முன் வைத்து மதகுரு காத்ரி உருவாக்கிய புரட்சி அலை சற்றே தணிந்திருக்கிறது. காத்ரிக்கும் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து போராட்டங்களைக் கைவிட்டிருக்கிறார் காத்ரி.

சூபிமதகுருவான காத்ரி, கனடாவிலிருந்து பாகிஸ்தான் திரும்பி அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தார். ஊழல் மலிந்து கிடப்பதால் நாடாளுமன்றம் மற்றும் மாகாண அரசுகளைக் கலைக்க வேண்டும், தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக இஸ்லாமாபாத் அருகே தமது ஆதரவாளர்களுடன் தொடர் போராட்டத்தை காத்ரி நடத்தி வந்தார். இது தொடர்பாக அரசுக்கும் கெடு விதித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் 4 பேர் கொண்ட குழு காத்ரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. சுமார் 5 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் காத்ரியின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுத் தரப்பு ஒப்புக் கொண்டது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் புரட்சி அபாயத்தில் சிக்கிய பாகிஸ்தான் சற்றே ஆசுவாசப்படுத்தி மூச்சுவிட்டிருக்கிறது!

இதைத் தொடர்ந்து வரும் தேர்தலில் காத்ரியின் கட்சியும் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+