கூட்டணியில் குறைவான கட்சிகளே இடம் பெற வேண்டும்: காங்கிரஸ்
ஜெய்ப்பூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் குறைந்த அளவு கட்சிகளுக்கே காங்கிரஸ் இடம் தர வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாகத்துறை அமைச்சருமான கமல் நாத் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸைத் தயார்படுத்த பல்வேறு உயர் மட்டக் கமிட்டிகளை சோனியா காந்தி அமைத்துள்ளார். அதில், அரசியல் சவால்கள்-அதை முறியடிப்பது குறித்த ஆய்வு நடத்தும் கமிட்டியில் உள்ள முக்கிய உறுப்பினர் கமல்நாத் ஆவார்.
ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட முக்கியமான தீர்மானம் கூட்டணிக் கட்சிகள் பற்றியதாகும். தேர்தலை கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் சந்திப்பது சாத்தியமில்லை என்கிறது அந்தத் தீர்மானம்.
இந்தப் பின்னணியில் இன்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்நாத்.
இரண்டு வகையான கூட்டணிகள் உள்ளன. ஒன்று தேர்தலுக்கு முன் அமைப்பது, இன்னொன்று தேர்தலுக்குப் பின் அமைவது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் குறைந்தபட்ச கட்சிகளையே சேர்க்க வேண்டும். அது தான் காங்கிரசின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது.
தேர்தலுக்குப் பின் போதிய அளவு வெற்றி கிடைக்காவிட்டால், புதிய கட்சிகளை கூட்டணிக்குக்குள் கொண்டு வரலாம்.
இதில் சில கட்சிகள் ஆட்சியில் சேரலாம், சில வெளியில் இருந்தும் ஆதரிக்கலாம் என்றார் கமல்நாத்.












Click it and Unblock the Notifications