நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
அபுஜா: நைஜீரியா நாட்டில் வாழும் இந்தியர்கள் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று இந்தியத் தூதரகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
போர்னோ பகுதியில் மைடுகுரியில் உள்ள இந்தியருக்கு சொந்தமான தொழிற்சாலையில் கடந்த ஜுலை மாதம் 25ம் தேதி நடத்தப்பட்ட தாகுதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
மேலும் கினியா வளைகுடா பகுதியில் பயணிக்கும் இந்திய கப்பல்களை கடற் கொள்ளையர் குறிவைத்து தாக்கி, கப்பல் பணியாளர்களை கடத்திச் செல்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி எஸ்.பி.புரூசல்ஸ் என்ற எண்ணெய் கப்பலில் இருந்த பணியாளர்கள் 3 பேரை கடத்தல்காரர்கள் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நைஜீரியாவில் தீவிரவாதம், ஆள்கடத்தல், ஆயுத முனையில் கொள்ளை அடித்தல், மற்றும் கடற் கொள்ளையரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக போகோ ஹராம் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் அதிகம் உள்ள கனோ பகுதியை இந்தியர்கள் முழுவதுமாக தவிர்ப்பது நல்லது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications