அதிமுக கூட்டத்துக்குப் போன மாவட்ட நீதிபதி - சஸ்பெண்ட் செய்தார் தலைமை நீதிபதி!
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி என்.வேலு, அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் சகிதம் அவர் அதிமுக கூட்டத்துக்குப் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி நாமக்கல்லில் அதிமுக கூட்டம் ஒன்று நடந்தது. இதில் வேலு தனது பாதுகாவலர்கள் புடை சூழ கலந்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ச்சையையும் கிளப்பி விட்டது.
லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராகும் வகையில் தொகுதி வாரியாக கூட்டம் நடத்த முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப ஒவ்வொரு தொகுதிக்கும் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான நால்வர் குழு சென்று நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து வருகிறது. அப்படி ஒரு கூட்டம்தான் டிசம்பர் 15ம் தேதி நாமக்கல்லில் நடந்தது. அதில்தான் நீதிபதி வேலு கலந்து கொண்டார்.
அவர் கலந்து கொண்டது கட்சியினரையே கூட ஆச்சரியப்படுத்தியது. அமைச்சர்களும் கூட அவரைப் பார்த்து வியப்படைந்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.கே.வேல் கூறுகையில், ஒரு மாவட்ட முதன்மையாக நீதிபதியாக இருந்து கொண்டு் வேலு இப்படிக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டது தவறானதாகும். அவர் இதில் கலந்து கொண்டிருக்கக் கூடாது. அதை விட தனது பணி நேரம் முடிந்த பின்னர்தான் கூட்டத்தில் கலந்து கொண்டதாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் வேலு. இது மிகவும் அபத்தனமான பேச்சாகும் என்றார்.
இந்த சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து தற்போது வேலுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மதுரைக்காரர்!
மதுரையைச் சேர்ந்தவர் வேலு. 1975ம் ஆண்டு வக்கீலாக பணியைத் தொடங்கியவர். 2006ம் ஆண்டு நேரடி நீதிபதி நியமனம் மூலம் நீதிபதிப் பணிகி்கு வந்தார். முதலில் மதுரையில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் 2010மந் ஆண்டு மே மாதம் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.
கரூர் மாவட்ட நீதிபதி ஜெய்சங்கர், அடுத்த உத்தரவு வரும் வரை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications