அல்ஜீரியாவில் 792 பிணயக்கைதிகள் மீட்பு: 32 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
அமீனாஸ்: அல்ஜீரியாவில் அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் பலரை பிணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையை அந்நாட்டு ராணுவம் தாக்கயதில் 23 வெளிநாட்டவர்கள், அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 32 தீவிரவாதிகள் பலியாகினர்.
அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த 16ம் தேதி அல்ஜீரியாவின் அமீனாஸ் பகுதி சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலையை தாக்கி அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிணயக் கைதிகளாகப் பிடித்தனர். பக்கத்து நாடான மாலியில் ஜிகாத் இயக்கத்தில் பிரான்ஸ் ராணுவத்தின் தலையீடு இருக்கக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கை.
பொறுத்துப் பார்த்த அல்ஜீரிய ராணுவம் நேற்று அந்த ஆலையைத் தாக்கியது. இதில் 32 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக ராணுவம் 11 தீவிரவாதிகளைக் கொன்றவுடன் பதிலுக்கு தீவிரவாதிகள் 7 பிணயக்கைதிகளை கொன்றுவிட்டனர். ராணுவத்தினர் ஆலையில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 685 அல்ஜீரிய தொழிலாளர்கள் மற்றும் 107 வெளிநாட்டவர்களை காப்பாற்றினர்.
ஆனால் நேற்றைய தாக்குதலில் 23 வெளிநாட்டவர்கள், அல்ஜீிரயர்கள் உயிர் இழந்துள்ளனர். இறந்தவர்களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ரோமானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அடக்கம். அந்த ஆலையில் இருந்த ஜப்பானியர்கள் உள்பட பலர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications