அணு மின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி தேசிய மீனவர் பேரவை அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் கடற்கரை கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டக்குழு சார்பில் இடிந்தகரையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட இடிந்தகரை, கூத்தக்குழி, உவரி, பெருமணல் போன்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
உண்ணாவிரதத்தின் போது உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மீனவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும், மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய மீனவர் பேரவை சார்பில் இந்தியா முழுவதும் கடற்கரை கிராமங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரையில் நாங்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications