பால் தாக்கரே பிறந்தநாள்: பெண்களுக்கு ‘கத்தி’ வழங்கும் சிவசேனா
மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரே பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி அந்த விழாவில் பங்கேற்க வரும் பெண்களுக்கு கத்தி வழங்க சிவசேனா கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி காலமானார். அவரது 87வது பிறந்தநாளை இன்று சிறப்பாக கொண்டாட மும்பையில் உள்ள சிவசேனா தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வரும் பெண்களுக்கு கத்தியை பரிசாக அளிக்க தெற்கு மும்பை சிவசேனா அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தெற்கு மும்பை விழாக்களில் பங்கேற்கும் பெண்களுக்கு கத்தி வழங்க முடிவு செய்திருப்பதாக அப்பகுதி சிவசேனா தலைவர் அஜய் சவுத்ரி கூறியுள்ளார். 'பெண்களை பாதுகாக்க அரசு தவறி விட்டது. அதனால், அவர்களின் பாதுகாப்புக்காக நாங்கள் கத்தியை இலவசமாக வழங்குகின்றோம். தற்காப்புக்காக கத்தியை உபயோகிக்கும் பெண்கள் மீது போடப்படும் வழக்குகளை சிவசேனா கவனித்துக்கொள்ளும்' என்று அவர் மேலும் கூறினார்.
பெண்களுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கை பர்ஸ்களுக்குள் வைத்துக்கொள்ளக் கூடிய அளவிலான மடக்கு கத்திகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச கத்தி வழங்கும் திட்டம் மும்பையின் மேலும் பல பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என சிவசேனா தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து சிவசேனா சார்பில் ஏற்கனவே பெண்களுக்கான அவசர தொலைபேசி உதவி சேவை மையம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்புக்காக கத்தி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications