மு.க.முத்துவின் பேத்திக்கு திருமணம்... கொள்ளுத் தாத்தா கருணாநிதி நடத்தி வைத்தார்
Subscribe to Oneindia Tamil

மு.க.முத்து- சிவகாமசுந்தரி தம்பதியரின் மகள் வழிப் பேத்தியும், சி.கே.ரங்கநாதன்- தேன்மொழி ஆகியோரின் மகளுமான அமுதவல்லிக்கும், மூத்த ஐபிஎஸ் அதிகாரி சண்முக ராஜேஸ்வரன்- சுமதி ஆகியோரின் மகன் சித்தார்த்துக்கும் இன்று காலை சென்னை ஈஞ்சம்பாக்கம் கவின்சோலையில் திருமணம் நடந்தது.
திமுக தலைவர் கருணாநிதி திருமணத்திற்குத் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்தத் திருமணத்தில் கருணாநிதியின் புதல்வர்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.செல்வம் உள்ளிட்டோரும், பேரன், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தாரும் திமுக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications