டெல்லியில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவி இறுதியாண்டு தேர்வில் 73% மார்க் வாங்கியுள்ளார்
டேராடூன்: டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவி இறுதியாண்டு தேர்வில் 73 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் பிசியோதெரபி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் பின்னர் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார்.
டேராடூனில் உள்ள சாய் இன்ஸ்டிடியூட்டில் பிசியோதெரபி படித்த அந்த மாணவி எழுத்து தேர்வுகளை முடித்துவிட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெறச் சென்றபோது தான் அந்த கொடூரச் சம்பவம் நடந்தது. 4 ஆண்டு கால படிப்பில் இறுதியாண்டு தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் இறந்த மாணவி 1100க்கு 800 மதிப்பெண்கள் அதாவது 73 சதவீதம் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
முந்தைய தேர்வுகளில் 55 முதல் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்ற அவர் இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளார் என்று அவரது பேராசிரியர் ஹரிஷ் அரோரா தெரிவித்தார்.
அவர் நான்கு ஆண்டுகள் படிக்க ரூ.1,80,000 கட்டணம் செலுத்தியுள்ளார். டேராடூனில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடக்கும் விழா ஒன்றில் வைத்து அவரது கல்வி கட்டணத் தொகையை அவரது குடும்பத்திடம் திருப்பிக் கொடுக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு வேளை அவர்கள் பணத்தை வாங்க மறுத்தால் அந்த தொகை ஏழைப் பெண்களை படிக்க வைக்க பயன்படுத்தப்படும் என்று பேராசிரியர் ஹரிஷ் அரோரா தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications