உ.பி.யில் சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த நீதிபதி…. கோர்ட்டை புறக்கணித்த வக்கீல்கள்
அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் நீதிபதி ஒருவரே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் சில்மிஷம் செய்த நீதிபதியை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர்.
உ.பி. மாநிலம் கோண்டா மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார் என்பது குற்றச்சாட்டு. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். நீதிபதி மீதான புகார் என்பதால், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
பாலியல் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீதிபதியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நேற்று கோண்டா கோர்ட்டை புறக்கணித்தனர். அத்துடன் நீதிபதியின் அறையையும் அடித்து நொறுக்கினர்.
அதேநாளில், 21 வயதான மற்றொரு பெண்ணையும் அந்த நீதிபதி பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் தரப்பில் போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
பெண்கள் தனியாகச் சென்றால் தொல்லை, பள்ளிக்குச் சென்றால் தொல்லை, வேலைக்குச் சென்றால் தொல்லை... என எல்லா இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய குற்றங்களுக்கு நீதி வழங்கக் கூடிய நீதிமன்றத்தில் கூட பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்பதற்கு உத்தர பிரதேசத்தில் நடந்த சம்பவமே சாட்சியாக உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications