ஈழப் போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக செஞ்சோலை சிறார் இல்லம் மீண்டும் திறப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கு முன்னர் பொறுப்பாளராக இருந்தவரும், வடக்கு-கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின்(நெர்டோ) தலைவருமான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இந்த இல்லத்தை திறந்து வைத்தார்.
போரின் பின்னர் இலங்கை படையினரின் பெரிய முகாமாக செயல்பட்டு வந்த செஞ்சோலை இல்லத்தினை மீண்டும் இயங்க வைப்பதற்காக படையினருக்கும் நெர்டோ அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து இந்த இல்லம் அமைந்திருந்த நிலத்தை விடுவிப்பதற்கு படைத் தரப்பு சம்மதித்தது.
இந்நிலையில் புலம்பெயர் தமிழ் உறவுகளின் உதவியுடன் நெர்டோ அமைப்பினரால் அந்த இல்லம் புனரமைக்கப்பட்டு, அதன் தலைவரான குமரன் பத்மநாதனால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் (மாவட்ட ஆட்சித் தலைவர்) திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட படைத் தளபதி உதய பெரேரா, வடமாகாண சிறார் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி, கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளர் உள்ளிட்ட புலம்பெயர் தமிழர்கள் பலர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்த்தேக்கமான இரணைமடுக்குளத்துக்கும் இதன் அருகில் அமைந்துள்ள மற்றொரு குளமான கனகாம்பிகைக் குளத்துக்கும் அருகில் இந்த இல்லம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இல்லத்தில் தற்போது 30 சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 20க்கும் அதிகமான பிள்ளைகள் எதிர்வரும் வாரங்களில் அனுமதிக்கப்படவுள்ளனர். அனைத்துச் சிறார்களும் போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகளின் பிள்ளைகள் என நெர்டோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications