நாமக்கல்: சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் கைது
நாமக்கல்: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் அருகே கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு விசைத்தறி தொழிலாளிக்கு 6 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த சிறுமிகள் இருவரும் செவ்வாய்கிழமையன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர், ஆட்டுக்குட்டி பிடித்துத் தருவதாகக் கூறி தனியே அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அவன் மிரட்டியுள்ளான். இது குறித்து சிறுமிகளின் பெற்றோர், திருச்செங்கோடு டிஎஸ்பியிடம் அளித்த புகாரின் அடிப்படையில், குமார பாளையம் காவல்துறையினர் மாணவரை கைது செய்தனர். மாணவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவு மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications