பெண்களிடம் பார்த்துப் பழகு, கரடி பொம்மை வாங்கிக் கொடு: எரித்துக் கொல்லப்பட்ட மாணவி கடிதம்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கோட்டைகாட்டுபுதூரை சேர்ந்தவர் நல்லசிவம். அவருடைய மனைவி லோகநாயகி. இவர்களுடைய மகள்கள் ரூபினி, நந்தினி (19). நந்தினி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார்.
கடந்த 20-ந் தேதி கோவை செல்வதற்காக சிவகிரி பஸ்நிலையம் சென்றார். பின்னர் கோவைக்கு சென்றுவிட்டதாக தந்தைக்கு செல்போனில் தகவல் கூறினார். இந்தநிலையில் நந்தினி கடந்த திங்கட்கிழமை காலை சிவகிரியில் சாலையோரமாக எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
நந்தினியின் உடலில் வெட்டு காயங்கள் எதுவும் இல்லை என்பதும், ஆனால் அவரது உடலின் பின்பகுதி எரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டங்களும் வெடித்தன. அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. சிவகிரியில் நேற்று கடையடைப்பும் நடந்தது.
இந்த நிலையில், நந்தினி தனது தோழி ஒருவருக்கு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து பார்சல் பிரிக்கப்பட்டது. அதில் நந்தினி எழுதிய 40பக்கங்களுக்கும் மேலான கடிதம் ஒன்று இருந்தது. அதில் கபிலன் என்பவரை காதலித்தது குறித்து நந்தினி குறிப்பிட்டிருந்தார்.
அக்கடிதத்தின் முழுவிவரத்தையும் போலீஸார் தெரிவிக்கவில்லை. ஆனால் அதில், கபிலன் நீ பெண்களிடம் பார்த்து பழகு, நான் வானத்தில் நட்சத்திரமாக இருந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். எனது தோழிகள் எனக்கு 4 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளது. அந்த பணத்தை வாங்கி எனக்கு பிடித்தவர்களுக்கு கரடி பொம்மை வாங்கி கொடு என்று கூறியிருந்தார் நந்தினி என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
கபிலனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது ஆரம்பத்திலிருந்தே நான் நந்தினியைக் காதலிக்கவில்லை. ஆனால் அவரது தொடர் வற்புறுத்தலால் காதலிப்பதாக கூறினேன். ஆனாலும் கூட பின்னர் காதலை முறித்துக் கொண்டேன். அதன் பிறகு நண்பர்களாகப் பழகி வந்தோம் என்று கூறினார். மேலும் கொலை நடந்தபோது கபிலன் கல்லூரி விடுதியில் இருந்ததும் உறுதியாகியுள்ளது. எனவே போலீஸாருக்கு இந்த வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கபிலன் - நந்தினியின் நட்பை விரும்பாத அல்லது இவர்களின் முந்தைய காதலால் பாதிக்கப்பட்ட பெண் யாராவது இந்தக் கொலையைச் செய்திருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications