இந்தியாவின் மிகச்சிறந்த பிரபலம் ஷாருக்… இசைத்துறையில் ஏ.ஆர். ரஹ்மான் நம்பர் 1: ஃபோர்ப்ஸ்
டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த முதல் நூறு பிரபலங்களின் பட்டியலில், வருமானத்தின் அடிப்படையில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் முதலிடத்தை பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இசையமைப்பாளர் பிரிவில் ஏ.ஆர். ரஹ்மான் முதலிடம் பெற்றுள்ளார்.
திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், விளையாட்டு வீரர்கள், உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் பிரபலமான நூறு பேர் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ளது.
வருமானம் மற்றும் பிரபலம் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், பிரபல பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு 47 வயதான ஷாருக்கான் முதலிடம் பெற்றுள்ளார். இந்தப்பட்டியலில் சல்மான்கான் இரண்டாம் இடத்திலும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

ஷாருக்கான் ரூ. 202 கோடி
2011 அக்டோபர் முதல் 2012 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ஷாரூக் கான் 202 கோடியே 80 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளதால், அவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சல்மான்கான் ரூ. 144 கோடி
பிரபலமானவர்கள் அடிப்படையில் சல்மான் கானும், தோனியும் ஷாரூக் கானை விட முன்னணியில் இருந்தாலும், வருமானத்தின் அடிப்படையில் அவர் நம்பர் 1 இடத்தை தட்டிச்சென்றுள்ளார். அதே காலகட்டத்தில், சல்மான் 144 கோடி ரூபாயும், தோனி 135 கோடியே 16லட்சம் ரூபாயும் வருமானம் ஈட்டியுள்ளனர்.

முதல் 10 இடங்கள்
இவர்கள் தவிர, அக்சய் குமார், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், கரீனா கபூர், விரேந்திர ஷேவாக், விராத் கோஹ்லி, கத்ரினா கைப் ஆகியோர் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளனர்.

தோனி நம்பர் 1
ஒவ்வொரு துறையிலும் முதலிடத்தில் உள்ளவர்கள் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில், விளையாட்டு வீரர்கள் பிரிவில் தோனி முதலிடத்தில் உள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான் நம்பர் 1
இசையமைப்பாளர் பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மான், முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்த பிரபலங்கள் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் ஏ.ஆர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார்.

50 இடங்களுக்குள் இளம் வயதினர்
சாய்னா நேவால், விராத் கோஹ்லி, அனுஷ்கா சர்மா, சானியா மிர்சா உள்ளிட்ட 12 பேர், முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்ற இளம் வயதினர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications