’பாகிஸ்தானுடன் நட்பாக இருக்கவே விரும்புகிறோம்.. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குடியரசு தின உரை!

64 வது குடியரசு தின விழாவையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையின் முக்கிய அம்சங்கள் :
நாடு பல நூற்றாண்டுகளில் பெறாத வளர்ச்சியை கடந்த 60 ஆண்டுகளில் பெற்றுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் மும்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பெருமளவில் கலாச்சார மாற்றம் நிகழ்ந்துள்ளது. வறுமையின் தீவிரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் நமது நாட்டின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நீதி, நியாயம், சமத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாடு அமைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் பங்கு
பொருளாதார வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு கிடைக்க வேண்டும். வறுமை, கல்வியின்மையை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேணடும். ஏழைக்கு வளர்ச்சியில் பங்கு கிடைக்கவில்லை என்றால் நக்சல் தீவிரவாதம் தலைதூக்கும். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிலைமை கையை மீறிச் சென்றுவிடும். சில மாநிலங்களில் நக்சல்களின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. அவர்களை எதிர் நோக்குவது பெரும் சவாலாக உள்ளது.
பெண்கள் சம உரிமை
பெண்களுக்கு எதிரான கொடுமை , சமூகத்திற்கு எதிரான கொடுமையே, பெண்கள் சம உரிமையை புறக்கணிக்க முடியாது. டில்லியில் நடந்த மாணவி பாலியல் கொடுமை சம்பவம் நமது மனதில் நீங்காத துயரத்தில் ஆழ்த்திவிட்டது. இதனால் இளைய தலைமுறையினர் கொதிப்படைந்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் நட்பு
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடந்த சம்பவத்திற்கு பின்னரும் , பாகிஸ்தானுடன் நட்பு நாடாக இருக்கவே இந்தியா விரும்புகிறது. அதற்காக பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு பாகிஸ்தான் நட்பாக இருப்பதாக நடிப்பது கவலை அளிக்கிறது.
நாட்டில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். போன்ற பல முக்கிய அம்சங்கள் ஜனாதிபதி உரையில் இடம் பெற்றிருந்தன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications