வெளிநாடுகளில் உள்ள இந்திய கருப்புப் பணம் ரூ. 25 லட்சம் கோடி!!

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று National Council for Applied Economic Research (NCAER), National Institute of Public Finance and Policy (NIPFP), and National Institute of Financial Management (NIFM) ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்த அமைப்புகள் கடந்த மாதமே தங்களது அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்திடம் வழங்கிவிட்டன.
இப்போது இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்தும், இதற்கு 30 சதவீத வருமான வரி (சுமார் ரூ. 8.5 லட்சம் கோடி) விதிப்பது குறித்தும் மத்திய நிதியமைச்சகம் திட்டங்களை வகுத்து வருகிறது.
இது தொடர்பான அறிவிப்புகளை விரைவில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவிப்பார் என்று தெரிகிறது.
ரூ. 25 லட்சம் கோடி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (GDP) 30 சதவீதமாகும்.
இந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்த ரூ.25 லட்சம் கோடி வரி கட்டாமல் அரசை ஏமாற்றி, சட்ட விரோதமாக கொண்டு சென்ற பணமாகும்.
இந்தப் பணத்துக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டால், மத்திய அரசுக்கு ரூ.8.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள 626 மாவட்டங்களிலும் சுமார் 2,000 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனைகளைக் கட்ட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது தவிர மத்திய அரசு வரியே இல்லாத பட்ஜெட் கூட போட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகள் ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 50,000 கோடியை மத்திய அரசு மீட்டதும் நினைவுகூறத்தக்கது.
இந்த ரூ. 25 லட்சம் கோடி கருப்புப் பணத்தில் ஊழல், லஞ்சப் பணமும் அடக்கம். கேமன் தீவுகள், மொரீசியஸ் உள்ளிட்ட பல வரி ஏய்ப்புக்கு உதவும் நாடுகள் மூலமாக இந்தப் பணம் உலகின் பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல இந்த கருப்புப் பணம் இந்தியாவுக்குள் ரியல் எஸ்டேட் துறைக்குள் வெளிநாட்டு முதலீடு என்ற பெயரில் வெள்ளமாகப் பாய்ந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications