விவசாயி தற்கொலை: ரூ.10 லட்சம் நிவாரணம் கேட்டு மதிமுகவினர் சாலை மறியல்
கோவில்பட்டி: நெல்லை மாவட்டம் கோவில்பட்டி அருகே தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு மதிமுக வினர் கோவில்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அடுத்த வரகனூரைச் சேர்ந்த ஜெகந்நாதன் என்ற விவசாயி, விவசாயக் கடனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி ஜெகநாதன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பிறகு வாங்க மறுத்த குடும்பத்தினரும் , உறவினர்களும் தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ் .ஜோயல் தலைமையில் கோயில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் , நெல்லை மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைகுமார் ,மற்றும் இணையதள ஒருகினைப்பாளர் மின்னல் முகமதுஅலி , மாணவர் அணிச் செயலாளர் தி.மு.ராசேந்திரன் , ரமேஷ் , விநாயகா ரமேஷ் , உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்டோர் முன்பு மறியலில் பங்கேற்றனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டோருடன் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், பேச்சுவார்த்தை நடத்தினர். வடகனூர் என்பது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதால் நெல்லை மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் கூறி கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும் என்றும், அதுவரை போராட்டத்தைக் கைவிடுமாறும் கூறினார்.
இதையடுத்து சாலை மறியலை மதிமுகவினரும் உறவினர்களும் கைவிட்டனர். சடலத்தை எடுத்துச் சென்ற உறவினர்கள் பின்னர் இறுதிச்சடங்கினை செய்து அடக்கம் செய்தனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications