'கருப்பசாமிகளின்' தயவு இல்லாமலேயே ஜெயலலிதா பிரதமராவார்: ஓ.பி. பேச்சு

வடசென்னை, வடக்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:
அதிமுக தேர்தல் அறிக்கையில் நல்ல பல திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார். பெண்கள் பயனடையும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி இருக்கிறார்.மாணவர்கள் படிப்பதற்காக ரூ.17,000 மதிப்புள்ள இலவச லேப்-டாப்கள் வழங்கியுள்ளார்.
கருப்பசாமி தயவு தேவையில்லை
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில கருப்பசாமிகளின் தயவால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்ததாக கூறினார்கள்.இதன்பின்பு உள்ளாட்சி தேர்தலில் அந்த கருப்பசாமிகளோடு நாம் கூட்டணி வைக்கவில்லை. இருந்தாலும், 98 சதவீதம் நாம் வெற்றி வாகை சூடினோம். இதனால் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் வெற்றி பெற்று பல்வேறு பதவிகளில் உள்ளனர். 10 மாநகராட்சிகளையும் நாம் கைப்பற்றி இருக்கின்றோம்.
யாராலும் அழிக்க முடியாது
அதிமுகவில் 14 லட்சம் உறுப்பினர்கள் இருந்ததை, 1.5 கோடி உறுப்பினர்களாக மாற்றிக் காட்டியவர் முதல்வர் ஜெயலலிதா ஆவார்.எம்.ஜி.ஆர். எந்த நோக்கத்திற்காக அதிமுகவை உருவாக்கினாரோ, அதை சிந்தாமல், சிதறாமல் புரட்சித் தலைவி காத்து வருகிறார். அதிமுகவை கருணாநிதியாலோ, விஜயகாந்தாலோ அழிக்க முடியாது. அதிமுகவை எக்கு கோட்டையாக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி உள்ளார்.
விஜயகாந்த சட்டசபைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை?. சரக்கு இருந்தால்தானே அவர் கேள்வி கேட்பார். அவரிடம் சரக்கு இல்லையே!
நாட்டின் பிரதமராவர்
நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சி அமைய வேண்டும் என்றால், முதல்வர் ஜெயலலிதா யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவருக்கு வெற்றிவாகை சூடித்தர வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், நாட்டின் பிரதமராக ஜெயலலிதா வருவார் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications