சென்னை ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டிக்கு ரூ. 1 கோடி... ஜெ. உத்தரவு
சென்னை: சென்னை ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டிக்கு ரூ. 1 கோடி நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளிடையே உள்ள விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் வகையில், 2012-2013 ஆம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகளிடையே மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகை வழங்கிட முதல்வர் ஜெயலலிதா 30 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கிட ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்.
இந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5,000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3,000, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2,000 மற்றும் சான்றி தழ்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.
2012-2013-ம் ஆண்டு முதல் கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டினை மேம்படுத்தும் பொருட்டு, தமிழகத்தின் பத்து கடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பத்து கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தொடரா மானியமாக ரூ.20 லட்சமும் தொடர் மானியமாக ரூ. 5.00 லட்சமும் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். இதில் கலந்து கொண்டு முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.3,000 இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2,000 மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.
சென்னை ஓபன் டென்னிஸ் மற்றும் சென்னை ஓபன் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகளைப் போன்று 2013-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சென்னை ஓபன் சூப்பர் இறகுப்பந்து விளையாட்டு போட்டிகளையும் நடத்திட முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார். இப்போட்டிகளை நடத்திட தொடர் மானியமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஜவஹர்லால் நேரு பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் பல்வேறு நவீன வசதிகளுடன், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது.
அச்சமயம் அங்கு நிறுவப்பட்ட குளிர்சாதன வசதிகள் மற்றும் ஒளிவிளக்கு வசதிகள், காலத்தினால் பழமையடைந்துவிட்டதால், இவைகளை மாற்றியமைக்கவும், உலகத்தரம் வாய்ந்த ஒலியமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கவும், இவ்வசதிகளை ஏற்படுத்திட ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications