ராணிப்பேட்டையில் அமைச்சர் முகம்மது ஜான் வீடு முற்றுகை… பரபரப்பு

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அமைச்சர் முகமதுஜான் வீடு உள்ளது. திடீரென்று அமைச்சரின் வீட்டை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிறையில் இருக்கும் அபுதாஹிர் என்பவரை தோல் அழிவுநோய் தாக்கியுள்ளது.இதனால் அவரை சிகிச்சைக்காக பரோலில் விடுதலை செய்யவும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் குறித்து பேசிய இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் நஸீர் அகமது,நீதிமன்றமே பரோலில் அனுப்புவதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு பரோலில் விட மறுக்கிறது என்றார். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லி வரை இப்பிரச்னை கொண்டு செல்லப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அமைச்சரின் வீட்டை நோக்கி வந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications