For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதி மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட கமல் முஸ்லிம்களை புண்படுத்தி படம் எடுக்கமாட்டார்: ஈவிகேஸ் இளங்கோவன்

By Siva
Google Oneindia Tamil News

EVKS Elangovan
ஈரோடு: கமல் ஹாசன் முஸ்லிம்களை புண்படுத்தும் நோக்கில் படம் எடுக்க மாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு கிளப்பப்பட்டுள்ளது. கமல் ஹாசன் ஜாதி மதங்களுக்கு அப்பாற்ப்பட்டவர், முற்போக்கு சிந்தனை உள்ளவர். முஸ்லிம்களை புண்படுத்தும் நோக்கில் அவர் படம் எடுக்கமாட்டார்.

கலை நுணுக்கத்துடன் படம் எடுக்கையில் அவரையும் அறியாமல் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு படத்தை பார்க்க ஒத்துழைக்க வேண்டும். இந்த பிரச்சனை குறித்து கமல் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தமிழக விவசாயிகள் வறட்சியால் கடும் பாதிப்புக்குள்ளாகினர். கடும் மின் வெட்டு இருப்பதால் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காவிரி பிரச்சனையில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து குரல் கொடுப்பதைப் போன்று தமிழக கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்ட வேண்டும். திமுக, காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகன் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்றார்.

English summary
Former central minister EVKS Elangovan told that Kamal Hassan is beyond religion and castes. Kamal won't hurt the feelings of muslims in a movie, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X