பிரேசிலில் நைட் கிளப்பில் பயங்கர தீ: 233 பேர் பலி, 100 பேர் காயம்
ரியோடி ஜெனிரோ: தெற்கு பிரேசிலில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 233 பேர் பலியாகினர்.
தெற்கு பிரேசிலின் ரியோ கிராண்ட் டோ சுல் மாநிலத்தில் உள்ள சாண்டா மரியா நகரில் கிஸ் என்னும் கேளிக்கை விடுதி உள்ளது. அந்த விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 2,000 இளைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு இசைக்குழு பாடுகையில் விடுதிக்குள் வான வேடிக்கை விடப்பட்டதில் அது உட்கூரையில் பட்டு தீப் பிடித்தது.
இதையடுத்து அங்குள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு பக்க சுவரை இடித்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர். அதற்குள் மூச்சு திணறியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் 233 பேர் பலியாகினர். முதலில் 245 பேர் பலியானதாக கூறப்பட்டது. அதன் பிறகு இந்த எண்ணிக்கை 233 என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 16 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications