'போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் 'எக்குத்தப்பு'!
சென்னை: பேஸ்புக்கின் ஓனர் நம்ம ஊர்க்காரர்களின் பேஸ்புக் பக்கங்களுக்குள் ஒரு விசிட் அடித்தார் என்றால் வயிறு வலிக்கச் சிரித்துச் சிரித்தே செத்துப் போய் விடுவார்... அப்படி ஒரு அமர்க்கள, அதகளத்தை நம்மவர்கள் செய்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

காமெடிப் பெயர்கள்
பேஸ்புக்குகளுக்குப் பெயர் வைப்பதில்தான் நம்மவர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர். குறிப்பாக காமெடி வசனங்களையே பெயராக்கி பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ...
சந்தானம் நடித்த படங்களின் பாப்புலர் வசனங்கள் பலமும் இப்போது பேஸ்புக் பக்கங்களின் பெயர்களாக உலா வருகின்றன. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ... உனக்கே அவ்ளோ அடப்புன்னா.. உள்ளிட்ட பல வசனங்களை பேஸ்புக் பெயர்களாக பார்க்க முடிகிறது.

போன் வயர் பிஞ்சு போயி...
அதேபோல கவுண்டமணியின் பாப்புலர் பட வசனங்களில் ஒன்றான போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு என்ற வசனமும், டேய் நான் பத்தாவது பாஸ்டா போன்றவையும் பேஸ்புக் பக்கங்களாகி வயிறுகளைப் பதம் பார்த்து வருகின்றன.

நெருப்புல சுட்டா ஆறிடும்.. வெறுப்புல சுட்டா ஆறாது...
வைகைப் புயல் வடிவேலுவின் காமெடி வசனங்கள்தான் பேஸ்புக்கில் ஏக பாப்புலராக உள்ளன. அவரது பல வசனங்களையும் பேஸ்புக் பக்கங்களாகி விட்டனர் நம்மவர்கள். நெருப்புல சுட்டா ஆறிடும், வெறுப்புல சுட்டா ஆறாது.. வெடிச்சது அந்த பஞ்சு மட்டுமில்லை, அந்தக் குருவியோட... என்பது உள்ளிட்ட பல வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன.

ஹலோ... துபாயா...
அதேபோல வளைகுடா ரசிகர்களைக் கவரும் வகையில் அது தொடர்பான காமெடி வசனங்களையே தலைப்பாக்கியும் சிலர் பேஜ் வைத்துள்ளனர். ஹலோ துபாயா, ஒட்டகப் பால்ல டீ போடுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது உள்ளிட்ட வசனங்களே இவற்றின் பக்கத் தலைப்புகளாகவும் உள்ளன.

அப்படியே தத்ரூபமாய்
இந்த பேஸ்புக் பக்கம் ஒரு ரவுண்டு போய் விட்டு வந்தாலே போதும், உங்களது மனக் கவலை எல்லாம் பறந்து போய் விடும். அப்படி ஒரு சிரிப்புப் பக்கங்களாக இவை உள்ளன. வீடியோக்களைப் போடுவதும், அதை ரீமிக்ஸ செய்து போடுவதிலும், படங்களுக்கு அட்டகாசமான கேப்ஷன்கள் தருவதும் என உண்மையிலேயே இவற்றை சீரியஸாக செய்கிறார்கள் பலரும்.
இவரு பாஸா இல்ல லூஸா... இதுவும் ஒரு கூட ஒரு 'பேஸி'ன் முகவரிதான்...!
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications