விரிசலான ஆர்.எஸ்.எஸ்.- பாஜக உறவு! சீராக்க போராடும் ராஜ்நாத்சிங்!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கும் இடையேயான உறவு சீர்குலைந்து போயிருப்பதால் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டாலும் அதன் முக்கிய கொள்கை முடிவுகள் அனைத்தும் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் எடுக்கும். நிதின் கத்காரியை மீண்டும் பாஜக தலைவராக்க ஆர்.எஸ்.எஸ். விரும்பியது. ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விருப்பத்துக்கு மாறாக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பொழுது நிதின் கத்காரியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களும் பாஜக தலைவர்களும் இணைந்தே வெளியேற்றிவிட்டதாக 'கட்டுப்பாட்டுக்கு' பெயர் போன ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலேயே கலகக் குரல் வெடித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர்களுடன் இன்று ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் பாஜக தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், எல்.கே. அத்வானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான தத்தாத்ரேயா, சுரேஷ் சோனி, பைய்யாஜி ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த ஒரு பிளவும் இல்லை என்றுகூறினார்.
இதனிடையே ஆர்.எஸ்.எஸ்.- பாஜக இடையே ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது. இரு கட்சிகளிடையே இப்படியான ஒரு குழு தற்போதுதான் முதல் முறையாக அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு











Click it and Unblock the Notifications