ராஜினாமா செய்த 12 கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.க்கள் எதியுரப்பா கட்சியில் இணைந்தனர்
பெங்களூர்: கர்நாடகத்தில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் முதல்வர் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் நேற்று இணைந்தனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா பாஜகவில் இருந்து வெளியேறி கர்நாடக ஜனதா கட்சியை துவங்கினர். இதையடுத்து அவருக்கு ஆதரவான 13 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 29ம் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதில் 12 பேரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அந்த 12 பேரும் பாஜகவில் இருந்து விலகி எதியூரப்பா தலைமையில் நேற்று கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.
அதன் பிறகு எதியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முன்னாள் அமைச்சர்கள் ஷோபா கரந்தலஜே, சி.எம். உதாசி உள்ளிட்ட 12 பேர் பாஜகவில் இருந்து விலகி எங்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்பித்த பிறகு அதை ஏற்காமல் சபாநாயகர் போப்பையா அவர்களை பள்ளி மாணவர்கள் போன்று நடத்தியுள்ளார். மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்பதால் சபாநாயகர் வெளியூர் சென்றுவிட்டார்.
சபாநாயகர் பதவிக்கான கௌரவத்தை அவர் பாதுகாக்க வேண்டும். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதங்களை சமர்பித்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டு 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும். அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிப்போம். வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவேன்.
முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. பட்ஜெட்டை தாக்கல் செய்வது, அரசை காப்பாற்றிக் கொள்வது ஆகியவை ஷெட்டர் கையில் தான் உள்ளது. நான் எந்த எம்.எல்.ஏ.வையும் ராஜினாமா செய்ய வற்புறுத்தவில்லை. கர்நாடக ஜனதா கட்சியை பலப்படுத்த மேலும் பல பாஜ பல எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இருந்து வந்தால் அவர்களை வரவேற்பேன் என்றார்.
தன்னை நீக்கியவரை நீக்கிய எதியூரப்பா:
முன்னதாக கர்நாடக ஜனதா கட்சியைத் துவங்கிய பிரசன்ன குமார் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து எதியூரப்பாவை நீக்கி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். பதிலுக்கு பிரசன்ன குமாரை நீக்கி எதியூரப்பாவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். தேர்தல் ஆணையம் எதியூரப்பாவின் கடிதத்தை ஏற்றுக் கொண்டது.
இதற்கிடையே தேர்தல் நெருங்கி வருவதால் எதியூரப்பா மற்றும் அவரைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஷெட்டர் இடமாற்றம் செய்து வருகிறார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications