டெல்லி பலாத்கார வழக்கு- 5 பேர் மீது விரைவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது இன்று விரைவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.தலைநகர் டெல்லியில் 10 நாட்களாக பெரும் போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து நீதிபதி வர்மா தலைமையில் பலாத்கார குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் மீது டெல்லி விரைவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் இன்று பதிவு செய்யப்பட்டன. இவர்கள் அனைவர் மீதும் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் இனி வழக்கு விசாரணை தொடர்ந்து விரைவாக நடைபெறும். இந்த வழக்கில் 6-வது நபர் சிறார் என்று விசாரணை அமைப்பு அறிவித்துவிட்டதால்தான் சிறார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications