புதுவை முன்னாள் முதல்வர் ப. சண்முகம் காலமானார்! ஜி.கே வாசன், ராமதாஸ் இரங்கல்!
காரைக்கால்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் ப. சண்முகம் (வயது 84) இன்று காலமானார். அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் நெடுங்காட்டில் தமது வீட்டில் படியில் ஏறும் போது இன்று காலை மயங்கி கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக காரைக்கால அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
புதுவை முன்னாள் முதல்வர் ப. சண்முகம் மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுபெரும் காங்கிரஸ் தலைவரான ப.சண்முகம் விடுதலைப் போராட்ட தியாகி, புதுவை முதல்வராகவும், 2 முறை எம்.பி.யாகவும் இருந்து மக்கள் பணியாற்றி உள்ளார். அவரது இழப்பு புதுவை காங்கிரசுக்கு மட்டுமல்ல. மூப்பனாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சண்முகத்தின் இழப்பு அகில இந்திய காங்கிரசுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் புதுவை காங்கிரசாருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், புதுவை முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ப. சண்முகம் இன்று காலை அவரது வீட்டில் மயங்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
புதுவையில் கடந்த 1954-ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவ அவை அமைக்கப்பட்ட போது அதன் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். அதன்பின் இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். காங்கிரஸ் தலைவர்களான இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி ஆகியோரிடம் நெருக்கமாக இருந்து புதுவை மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர். இரண்டு முறை புதுவை முதலமைச்சராக இருந்த போதும் எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தியவர்.
தூய்மையான, நேர்மையான அரசியலுக்கு சொந்தக்காரரான அவர் என்னிடம் நெருக்கமான நட்பும், பாசமும் கொண்டி ருந்தார். பொதுவாழ்க்கையில் தம்மை முழுமையாக அர்ப் பணித்துக் கொண்ட அவர் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது மறைவால் புதுவை மாநிலம் தன்னலம் கருதாத தலைவரை இழந்து விட்டது. அவரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கும், நன்பர்களுக்கும் புதுவை மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications