ஆசாத் மைதான வன்முறையாளர்களுக்கு புகலிடம் கொடுத்தார் மும்பை போலீஸ் அதிகாரி- செய்தி
மும்பை: மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு மும்பை முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் ஷாம்ஷெர் கான் பதான் தனது போலீஸ் குடியிருப்பு வீட்டி்ல புகலிடம் கொடுத்தாக மிட்டே பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அஸ்ஸாமில் முஸ்லீம்களுக்கு எதிராக வெடித்த பெரும் கலவரத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடந்தது.
அந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் போலீஸாரைத் தாக்கினர், பெண் போலீஸார் மானபங்கப்படுத்தப்பட்டனர். மேலும் பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர். போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன.
இந்த கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 44 போலீஸார் உள்பட 52 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 80 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட பலருக்கு முன்னாள் உதவிக் கமிஷனர் ஷாம்ஷெர் கான் பதான் உதவியதாகவும், அவர்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாகவும் மிட்டே பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
ஷாம்ஷெர் கான் பதான் சமீபத்தில் தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். வன்முறை வெடித்த சில நிமிடங்களில் அதில் ஈடுபட்டவர்கள் போலீஸ் குடியிருப்பில் இருந்த பதான் வீட்டுக்கு விரைந்ததாகவும், அங்கு பதுங்கிக் கொண்டதாகவும் மிட்டே செய்தி கூறுகிறது. நிலைமை கட்டுக்குள் வந்த பிறகே அவர்கள் வெளியேறிச் சென்றனர் என்றும் மிட்டே கூறுகிறது.
போலீஸார் நடத்திய விசாரணையில் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகவும் மிட்டே கூறுகிறது.












Click it and Unblock the Notifications