உ.பி.யில் மாற்றாந்தந்தையால் மாதக்கணக்கில் கற்பழிக்கப்பட்ட 20 வயது பெண்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 20 வயது இளம்பெண் தனது மாற்றான் தந்தையால் மாதக் கணக்கில் கற்பழிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதசே மாநில தலைநகர் லக்னோவில் உள்ள மால் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருர் தனது கணவனைப் பிரிந்த பிறகு வேறு ஒருவரை மணந்துள்ளார். அப்பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் 20 வயதுள்ள மகளை இரண்டாவது கணவர் மாற்றான் தந்தை என்ற உறவையும் மறந்து கடந்த 4 முதல் 5 மாதத்தில் பலமுறை கற்பழித்துள்ளார்.
இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் அவ்வளவு தான் என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது தொல்லையை தாங்கமுடியாமல் அந்த இளம்பெண் நடந்தது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். உடனே அவர் தனது மகளுக்கு நேர்ந்தது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கற்பழித்தவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications