பிரதமர் வேட்பாளர் யார்? பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் நிதிஷ்குமார்
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை உடனே அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று ஒருதரப்பு வலியுறுத்தி வருகிறது. விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பும் கூட மோடிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
ஆனால் மோடியை தொடர்ந்து எதிர்த்து வரும் நிதிஷ்குமார், முன்பு வாஜ்பாய்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. அதையே தற்போதும் பின்பற்ற வேண்டும். பிரதமர் வேட்பாளர் அவரா? இவரா? என்ற யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து அதிகாரப்பூர்வமாக பெயரை அறிவிக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
ஆனால் திடீரென தாம் அப்படி ஒரு பேட்டியே கொடுக்கவில்லை என்று அந்தர் பல்டியும் அடித்திருக்கிறார் நிதிஷ்குமார்.
இதேபோல் பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் தலைவர் பாசிஷ்தா நாராயண் சிங்கும் முந்தைய தேர்தல்களில் வி.பி.சிங், வாஜ்பாய் போன்றவர்களை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவித்தது பலனளித்தது.அதைத்தான் இப்போதும் கோருகிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications