For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''ஈ, கொசு, கரப்பான் பூச்சி, எலி''

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவுப் பாதுகாப்புச்சட்டம் சிறுவணிகர்களை முற்றிலும் பாதிக்கும் எனவே இந்த சட்டத்தை முழு மனதோடு வரவேற்க முடியாது திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அறிவியல் அடிப்படையில் உணவுப் பொருள்களைப் பராமரிப்பதற்கும், உணவுப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதியை ஒழுங்குபடுத்துவதற்கும், உணவுப் பொருள்கள் மனிதர்கள் உண்பதற்குப் பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளன என்பதை உறுதி செய்வதற்கும் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின் படி உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏன், தற்காலிகக் கடைக்காரர்கள், தெருவில் கூவி விற்பனைச் செய்பவர்கள் போன்ற சிறு வணிகர்களும் கூட, பதிவு செய்து கொண்டு உரிமம் பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தூசி, ஈ, கொசு, கரப்பான் பூச்சி, எலி போன்றவை விற்பனை செய்யும் கடைகளில் இருந்தால் லட்சக்கணக்கில் அபராதமும், மாதக்கணக்கில் சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது. இது ஒரு அபாயகரமான அம்சமாகும்.

இந்தச் சட்டத்தின் நோக்கம் உயரியது எனினும் அதில் உள்ள பல்வேறு அம்சங்கள் சிறு வணிகர்களைப் பாதிப்புக்கு ஆளாக்குவதாகவும் நடைமுறைக்கு சாத்தியமற்றவையாகவும் அமைந்திருக்கின்றன.

குற்றவியல் சட்டங்களில் இல்லாத அபராதங்களும், தண்டனைகளும் இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக வணிகர்கள் புகார் கூறியுள்ளனர்.

மேலும் வாகனங்களை எந்த இடத்திலும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்யலாம் என்றிருப்பதால், வணிகர்கள் பல்வேறு வகையான தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.

அனைத்து வகையான உணவுப் பொருள்களும் பேக்கிங் செய்யப்பட்டுத்தான் விற்பனை செய்யப்பட வேண்டுமென்ற கட்டாயம் இந்தச் சட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது. இப்படி பேக்கிங் என்பது கட்டாயப்படுத்தப்படுமானால், சிறு வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு உணவுப் பொருள்களை வாங்கி நுகரும் ஏழையெளியோர்க்கு அதிக விலை தரவேண்டிய நிலையும் உருவாகும்.

இதுபோன்ற நடைமுறைச் சாத்தியமில்லாத சிறு வணிகர்களைப் பெருமளவுக்குப் பாதிக்கக் கூடிய பல அம்சங்கள் இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாலும், இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது அதிகாரிகளால் பலவகையிலும் குறுக்கீடுகளும் துன்பங்களும் ஏற்படும் என்பதாலும், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் முழு மனதோடு வரவேற்கக் கூடியதாக இல்லை.

எனவேதான் சிறு வணிகர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மத்திய அரசு இதைக் கவனித்து, சட்டத்தின்அம்சங்களை மறு பரிசீலனை செய்து ஆக்கப் பூர்வமான வகையில் சிறு வணிகர்களுக்கு உதவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில்

English summary
DMK president Karunanithi did not happy with the Central Govt food security act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X