விஜய் கொண்டு வந்த புதிய மாற்றம்.. வன்னியரசு-க்கு தனி பெருமை.. சமூக நீதித்துறையின் முதல் அமைச்சர்!
தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது, விஜய் தலைமையிலான அரசு எப்படி நேற்று செயற்கை நுண்ணறிவு துறைக்காக தனித்துறையை உருவாக்கியதோ அதேபோல் தற்போது சமூக நீதித்துறையை அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைக்கப்பட்ட துறையின் பெயர் மாற்றப்பட்டு, சமூக நீதித்துறை என்ற புதிய பெயரில் தனி துறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய துறைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஆளுநர் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதன் மூலம் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று புதிதாக இணைந்த அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டபோது சமூக நீதித்துறை என்ற புதிய பெயரில் தனி துறையாக மாற்றப்பட்ட அறிவிப்பு வெளியானது.
இந்த மாற்றம் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சமூக நீதி என்ற கருத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் துறையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
வன்னி அரசு திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். அவருக்கு சமூக நீதித்துறை மட்டுமின்றி, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மலைவாழ் மக்கள் நலத்துறையும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறைகள் ஒதுக்கீடு மூலம் சமூக நீதி சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள முடியும்.
இதேவேளையில், இன்று அமைச்சராக பதவியேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதி MLA ஏ.எம். ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வக்ஃப் வாரியத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் பொறுப்பில் உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் இந்த இலாக்கா ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்தார். பதவியேற்பு விழா முடிந்த சில நிமிடங்களில் இந்த அறிவிப்பு வெளியானது.
-
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு












Click it and Unblock the Notifications