சென்னையில் இன்று டெசோ ஆலோசனை கூட்டம்! ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டம்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தர பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைமையிலான டெசோ அமைப்பு இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறது.
திமுக ஒருங்கிணைக்கும் தமிழ் ஈழ ஆதரவு அமைப்பான டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று மாலை 4.30 மணிக்கு அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான இக்கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், சுப்புலெட்சுமி ஜெகதீசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications