மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் நரேந்திர மோடி-வாசல் வரை வந்து வரவேற்றதாக மகிழ்ச்சி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முதல்வராகப் பதவியேற்ற பின்னர் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தி்ல பங்கேற்றார். இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசவில்லை.
இந்த நிலையில் டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் உரையாற்றுவதற்காக அவர் டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பிரதமரை இன்று காலை சந்தித்துப் பேசினார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீணடும் முதல்வராக அமர்ந்ததற்கு மோடிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாநில வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி குறித்த கோரிக்கையை பிரதமரிடம் வைத்தார் மோடி.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாசல் வரை வந்து என்னை மிகச் சிறப்பான முறையில் பிரதமர் வரவேற்றார். குஜராத் மாநில வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவுவதாக பிரதமர் உறுதி கூறினார். குறிப்பாக, அணை நீர்தேக்கத் திட்டம், எரிவாயு திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரினேன். அதற்கு பிரதமர் உதவுவதாக உறுதியளித்தார். பிரதமரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். புதிதாக அமைந்த அரசுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் மோடி.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications