போலீஸ் கஸ்டடியில் ‘அட்டாக்’ ஆட்கள்… ‘பொட்டு’ சுரேஷை போட்டுத் தள்ளிய மர்மம் விலகுமா?

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கடந்த 31-ந்தேதி மதுரையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பொட்டு சுரேசுக்கும், முன்னாள் வேளாண் விற்பனைக்குழு தலைவர் அட்டாக் பாண்டிக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தில் இந்த கொலை நடந்ததாக சந்தேகிக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக முன்னாள் துணைமேயர் மன்னர் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அட்டாக் பாண்டி தலைமறைவாகவே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நத்தம் கோர்ட்டில் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், உள்ளிட்ட 7 பேர் சரண் அடைந்தனர்.
சேலம் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 7 பேரை ஒரு வாரம் போலீஸ் காவலில் விசாரிக்க தனிப்படை போலீசார் மதுரை கோர்ட்டில் மனு செய்தனர். இதனையடுத்து மாஜிஸ்திரேட்டு ராஜலிங்கம் சரண் அடைந்த 7 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர். நேற்று இரவு முதல் அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
எதனால் முன்விரோதம்
மதுரையில் ரவுடிகளுக்கும், அரசியலில் பின்னணியில் காலம் தள்ளுபவர்களுக்கும் பெயருக்கு முன் கண்டிப்பாக பட்டப்பெயர் இருக்கும். அப்படித்தான் வி.பி. பாண்டியின் முன் ‘அட்டாக்' என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது. மதுரை திமுகவில் ஏற்கனவே ஒரு சுரேஷ் இருக்க குங்குமப் பொட்டு வைத்த சுரேஷ் ‘ பொட்டு' சுரேஷ் ஆனார். அதேபோல் அண்ணன் அழகிரியின் அழைப்புக்கு எஸ்ஸார் என்று முன் நின்ற கோபி ‘ எஸ்ஸார் கோபி என்று அழைக்கப்படுகிறார். இதில் பொட்டு சுரேஷ்க்கும் அட்டாக் பாண்டிக்கும் முன்விரோதம் என்று கூறப்பட்டாலும் அவரது கொலைக்கு தூண்டுதல் யார் என்றுதான் சந்தேகம் அதிகரித்துள்ளது.
நிதி நிறுவன மோசடி
மதுரை கீரைத்துறையில் செயல்பட்ட ஜெயம் நிதி நிறுவன மோசடியில் அட்டாக் பாண்டியின் பெயர் அடிபடவே அவர் கட்சியில் இருந்து படிப்படியாக ஓரம்கட்டப்பட்டார். இதிலிருந்தோ பொட்டுவுக்கும் அட்டாக் பாண்டிக்கும் மோதல் தொடங்கிவிட்டது. சில வழக்குகளினால் ஓராண்டுகாலம் ஜெயிலில் இருந்த அட்டாக் வெளியில் வந்த உடன் ஸ்டாலின் அணியில் ஐக்கியமாகியுள்ளார். இதுவும் இருவரிடையே பிரச்சினை வெடிக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் பொட்டு சுரேஷ் கொலையாகவே தலைமறைவான அட்டாக் பாண்டியை போலீசார் தேடிவருகின்றனர்.
எஸ்ஸார்- அட்டாக்
இதனிடையே திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியும், அட்டாக் பாண்டியும் உறவினர் என்பதால் போலீசின் விசாரணை பல கோணங்களில் திரும்பியுள்ளது. காவலில் எடுக்கப்பட்ட 7 பேரையும் தனித்தனியாக வைத்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் பொட்டு சுரேஷ் யார்? என்றே தெரியாது என்று அவர்கள் கூறியதாகவும், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையடுத்து அவர்கள் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பொட்டு சுரேசை கொல்ல எத்தனை நாட்கள் சதிதிட்டம் நடந்தது? கொலைக்காக பணம் கைமாறியதா? கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது, கொலையாளிகள் பயன்படுத்திய வாகனங்களை கொடுத்து உதவியது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தனிப்படை போலீசார் கேட்டு விசாரித்து வருகிறார்கள்.
சிக்குவாரா அட்டாக்
7 பேர் பயன்படுத்திய செல்போன்களில் பதிவான எண்களை வைத்தும் அவர்கள் பற்றிய விவரங்களையும் தனித்தனியாக விசாரித்து வருகிறார்கள். வருகிற 11-ந்தேதி வரை காவலில் வைத்து தனிப்படையினர் விசாரிக்கிறார்கள். அதற்குள் பொட்டு சுரேசின் கொலைக்கான முழு பின்னணியும் தெரிந்து விடும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தலைமறைவாக உள்ள அட்டாக் பாண்டியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
விலகாத மர்ம மரணம்
கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் கொலைமிரட்டல், நிலஅபகரிப்பு உள்ளிட்ட 6 வழக்குகளில் கைதான ‘பொட்டு' சுரேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறை ரூம் மேட் ஆக இருந்தது முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். அவர் கடந்த ஆண்டு திருச்சியில் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கான காரணம், குற்றவாளிகள் யார் என்பதும் இன்னமும் விலகாத மர்மமாகவே இருக்கிறது. அதேபோல இப்போது பொட்டு சுரேஷ் முடிவும் கோரமாக அமைந்திருக்கிறது. இரண்டு கொலைகளுக்கும் எதுவும் தொடர்பு இருக்கக் கூடுமோ என்றும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications