கண்டிப்பாக ஆஜராக வேண்டும்... கலாநிதி மாறனுக்கு தாம்பரம் கோர்ட் உத்தரவு

மார்ச் 2ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பம்மல் நகராட்சித் தலைவர் இளங்கோவன். இவர் சார்பில் வழக்கறிஞர் ஜெயமாலினி, தாம்பரம் கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
டிசம்பர் 11ம் தேதி, நில அபகரிப்பு என்ற தலைப்பில், சன் நியூஸ் தொலைக்காட்சியில், பல்லாவரம் எம்.எல்.ஏ., தன்சிங், பம்மல் நகராட்சி தலைவர் இளங்கோவன் ஆகியோர், நில அபகரிப்புக்கு துணை போயினர் என, காலை, 10.00 முதல் பிற்கபல் 2.00 மணி வரை தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை கண்டித்து, மனுதாரர்கள் சார்பாக, கடந்த மாதம், 13ம் தேதி, சன் நியூஸ் தொலைக்காட்சிக்கும், சன் குழும நிறுவனத்தாருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட பின், அதற்கான எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து, ஜனவரி 9ம் தேதி, மறு அறிவிப்பும், 10ம் தேதி, தந்தி தகவலும் அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் வராததால், மனுதாரர்கள் சார்பில், சன் குழும தலைவர் கலாநிதி மற்றும் சன் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் மீது, தாம்பரம் நீதிமன்றத்தில், ஜனவரி 18ம் தேதி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு, கடந்த மாதம் 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதன்பின், மனுதாரர் மற்றும் இதர சாட்சிகளின் பிரமாண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கடந்த, 2ம் தேதி வழக்கு சம்பந்தமாக வாதாடப்பட்டது.
வழக்கில் முகாந்திரம் உள்ளது என மாஜிஸ்திரேட் கருதியதால், நேற்று, வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மார்ச், 2ம் தேதி, சன் குழும தலைவர் கலாநிதி மற்றும் சன், டிவி தலைமை செய்தி ஆசிரியர் ஆகியோர், நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications