For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகிலேயே காஸ்ட்லியான நகரம் டோக்கியோ: விலைவாசியைக் கேட்டாலே கிறுகிறுக்கும்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே அதிக செலவு வைக்கக் கூடிய நகரங்கள்(காஸ்ட்லி நகரங்கள்) பட்டியலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகிலேயே அதிக செலவு வைக்கக் கூடிய நகரங்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்க நகரம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ஏமாற்றமே. அப்பொழுது இரண்டாவது இடத்திலாவது அமெரிக்க நகரம் உள்ளதா என்று கேட்டால் இல்லை.

2 ஜப்பானிய நகரங்கள், 2 சுவிட்சர்லாந்து நகரங்கள் மற்றும் 2 ஆஸ்திரேலிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன. சுற்றுலாத் துறைக்கு பெயர்போன சிங்கப்பூருக்கும் முதல் 10ல் ஒரு இடம் கிடைத்துள்ளது.

காஸ்ட்லியஸ்ட் டோக்கியோ

காஸ்ட்லியஸ்ட் டோக்கியோ

ஜப்பான் தலைநகர் டோக்கியோ தான் உலகிலேயே காஸ்ட்லியான நகரம். அதாவது அங்கு விற்கும் பொருட்களின் விலையைக் கேட்டாலே நீங்கள் மயங்கி விழுந்துவிடுவீர்கள்.

2வது இடத்தில் ஒசாகா

2வது இடத்தில் ஒசாகா

டோக்கியோவுக்கு அடுத்தபடியாக வாழ காஸ்ட்லியாக உள்ள நகரம் ஜப்பானில் உள்ள ஒசாகா ஆகும்.

3வது இடத்தில் சிட்னி

3வது இடத்தில் சிட்னி

ஆஸ்திரேலியாவின் சிட்னி காஸ்ட்லி நகரங்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

4வது இடத்தில் ஆஸ்லோ

4வது இடத்தில் ஆஸ்லோ

நார்வே தலைநகர் ஆஸ்லோ உலகின் 4வது காஸ்ட்லி நகரம்.

மெல்போர்னுக்கு 5வது இடம்

மெல்போர்னுக்கு 5வது இடம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு காஸ்ட்லி நகரங்கள் பட்டியலில் 5வது இடம் கிடைத்துள்ளது.

சிங்கப்பூருக்கு 6வது இடம்

சிங்கப்பூருக்கு 6வது இடம்

சிங்கப்பூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது சுற்றுலா. சுற்றுலா நகரமான சிங்கப்பூருக்கு காஸ்ட்லி பட்டியலில் 6வது இடம் கிடைத்துள்ளது.

7வது இடத்தில் ஜுரிச்

7வது இடத்தில் ஜுரிச்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச் நகரம் உலகின் 7வது காஸ்ட்லி நகரமாகும்.

8வது இடத்தில் பாரிஸ்

8வது இடத்தில் பாரிஸ்

பிரான்ஸ் தலைநகரும், காதல் நகருமான பாரிஸுக்கு உலகின் காஸ்ட்லி நகரங்கள் பட்டியலில் 8வது இடம்.

9வது இடத்தில் காரகஸ்

9வது இடத்தில் காரகஸ்

வெனிசுலா நாட்டில் உள்ள காரகஸ் உலகின் 9வது காஸ்ட்லி நகரம்.

10வது இடத்தில் ஜெனிவா

10வது இடத்தில் ஜெனிவா

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரம் 10வது காஸ்ட்லியான நகரமாகும்.

English summary
Japan capital Tokyo is the world's most expensive city to live. The second costliest is Osaka in Japan while Sydney, Oslo, Melbourne secured 3rd, 4th and 5th places respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X